sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/மைதானம்: சிக்ஸர் மெஷின் பாஸ் பேபி!

மைதானம்: சிக்ஸர் மெஷின் பாஸ் பேபி!

மைதானம்: சிக்ஸர் மெஷின் பாஸ் பேபி!


PUBLISHED ON : ஜூன் 01, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 01, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பதினைந்து வயது வைபவ் சூர்யவன்ஷி, நடப்பு ஐ.பி.எல். தொடரில் 27 பந்துகளில் 97 ரன்கள் எடுத்தவர். இந்தத் தொடரில் 72 சிக்ஸர்கள் அடித்து, மேற்கிந்திய தீவுகள் கிறிஸ் கெய்லின் பதினான்கு வருட சாதனையை முறியடித்தவர். அவரைப் பற்றிப் பிரபல கிரிக்கெட் ஜாம்பவான்கள் கூறிய கருத்துகள் இங்கே தரப்பட்டுள்ளன. இந்தக் கருத்துகளைக் கூறியவர்கள் யார், யார் என்பதைக் கண்டறிந்து எழுதுங்கள்.

1. சூர்யவன்ஷி பேட்டைச் சுழற்றும் விதம் அற்புதமானது. அதைவிட வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால், கால்களை நோக்கி வரும் பந்துகளுக்கு இடம் கொடுத்து, அவர் தனது முன் காலை நகர்த்தி விளையாடுவது அற்புதமாகவும் பிரமிப்பாகவும் உள்ளது.

2. என்ன ஓர் அற்புதமான ஆட்டம். இவரைப் புதிய சிக்ஸர் மெஷின் என்று சொல்லலாம்.

3. பாஸ் பேபி (Boss Baby), உலக சாதனைகளை எல்லாம் தகர்க்கிறார். இந்தக் குழந்தை மைதானத்தில் ஆடுவதைப் பார்க்க, நம்ப முடியாத அற்புதமாக இருக்கிறது.

4. ஒரு சிறுவன், உலகின் அதிவேகப் பந்துவீச்சாளர்களை இவ்வளவு எளிதாக எதிர்கொள்வது சாதாரண விஷயமல்ல. அவரது பேட்டிங்கில் இருக்கும் டைமிங் (Timing), முதிர்ச்சி என்னை மிகவும் கவர்ந்துள்ளது.

5. சூர்யவன்ஷிக்கு இருக்கும் ஆகச்சிறந்த குணம் என்னவென்றால், அவன் யாரை பார்த்தும் பயப்படுவதில்லை. நெட் பயிற்சியில் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை அவன் எதிர்கொள்ளும் போதே, இவன் ஐ.பி.எல். அரங்கில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தப் போகிறான் என்று எனக்குத் தெரிந்தது.



விடை:


1. சச்சின் டெண்டுல்கர்

2. மேற்கிந்திய தீவுகள் கிறிஸ் கெய்ல்

3. யுவராஜ் சிங்

4.கவில் கவாஸ்கர்

5. ரவிச்சந்திரன் அஸ்வின்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us