PUBLISHED ON : மே 25, 2026

அ நிறம் | அளவு
எக்ஸ்டீரிமோஃபைல்ஸ் பாக்டீரியா (Extremophiles) என்பவை மிகக் கடுமையான, அசாதாரணமான சூழல்களில் செழித்து வளரக்கூடிய பாக்டீரியங்கள். இந்தப் பாக்டீரியங்களில் சில இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை அவை வாழும் சூழலோடு சரியாகப் பொருத்துங்கள்.
1. தெர்மோஃபைல்ஸ் (Thermophiles) - அ) அதிக உப்புத்தன்மை கொண்ட பகுதிகள்
2. சைக்ரோஃபைல்ஸ் (Psychrophiles) - ஆ) கடுமையான அமிலத்தன்மை கொண்ட பகுதிகள்
3. ஹாலோஃபைல்ஸ் (Halophiles) - இ) அதிக வெப்பம் நிறைந்த பகுதிகள்
4. அசிடோஃபைல்ஸ் (Acidophiles) - ஈ) அதீத நீர் அழுத்தம் கொண்ட ஆழ்கடல் பகுதிகள்
5. பாரோஃபைல்ஸ் (Barophiles) - உ) உறைபனி மற்றும் மிகக் குளிர்ந்த பகுதிகள்
விடைகள்:
1.இ
2.உ
3.அ
4.ஆ
5.ஈ
