PUBLISHED ON : மே 11, 2026

இங்கு ஆஸ்ட்ரேசி (Asteraceae) தாவரக் குடும்பத்தைப் பற்றிய கேள்விக்கான பதில்களில் தொடர்பில்லாததை கண்டுபிடியுங்கள்.
1. இந்த குடும்பத்தைச் சேராத தாவரம் எது?
அ) சூரியகாந்தி (Sunflower)
ஆ) சாமந்தி (Marigold)
இ) செம்பருத்தி (Hibiscus)
ஈ) டாலியா (Dahlia)
2. இந்த குடும்பத்திற்கு தொடர்பு இல்லாத மஞ்சரி பண்பு எது?
அ) கேபிடுலம் (Capitulum)
ஆ) மஞ்சரித் தட்டு (Receptacle)
இ) புல்லி வட்டம் (Pappus)
ஈ) ஆணிவேர் தொகுப்பு (Taproot system)
3. இந்த குடும்பத்தைச் சேராத களைச்செடி (Weeds) எது?
அ) ட்ரைடாக்ஸ் (Tridax /வெட்டுக்காயப்பூண்டு)
ஆ) பார்த்தீனியம் (Parthenium/நச்சுச் செடி)
இ) சோளம் (Maize)
ஈ) ஆகிராடம் (Ageratum)
4. இந்த குடும்பத்தைச் சேராத மருத்துவ, அலங்காரத் தாவரம் எது?
அ) கரிசலாங்கண்ணி (Eclipta)
ஆ) ஜின்னியா (Zinnia)
இ) சைகஸ் (Cycas)
ஈ) சாமந்தி (Chrysanthemum)
விடைகள்:
1. செம்பருத்தி, மால்வேசி (Malvaceae) குடும்பத்தைச் சார்ந்தது. மற்றவை ஆஸ்ட்ரே சி குடும்ப மலர்கள்.
2. ஆணிவேர் என்பது பெரும்பாலான இரு வித்திலைத் தாவரங்களின் பொதுவான பண்பு. மற்றவை ஆஸ்ட்ரே சி குடும்ப மலர்களின் தனித்துவமான அடையாளங்கள்.
3. சோளம் ஒரு தானிய வகை (போயே சிக் குடும்பம்). மற்றவை ஆஸ்ட்ரே சி குடும்பத்தைச் சார்ந்த களைச்செடிகள்.
4. சைகஸ், ஜிம்னோஸ்பெர்ம் (Gymnosperm) வகையைச் சார்ந்த தாவரம். மற்றவை ஆஸ்ட்ரே சி குடும்பத்தைச் சார்ந்த பூக்கும் தாவரங்கள் (Angiosperms).
