PUBLISHED ON : ஜன 26, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இங்கு இந்தியாவின் உயிரியல் சார்ந்த தேசியச்சின்னங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை அவற்றின் அறிவியல் பெயரோடு சரியாகப் பொருத்துங்கள்.
1. தேசிய மலர்: தாமரை - அ) ஓஃபியோபேகஸ் ஹன்னா (Ophiophagus hannah)
2. தேசிய பாரம்பரிய விலங்கு: இந்திய யானை - ஆ) லாக்டோபாசிலஸ் பல்கேரிகஸ் (Lactobacillus bulgaricus)
3. தேசிய ஊர்வன: ராஜ நாகம் - இ) பிளாட்டனிஸ்டா கேஞ்செடிகா (Platanista gangetica)
4. தேசிய நுண்ணுயிரி: பாக்டீரியா - ஈ) எலிஃபஸ் மேக்சிமஸ் இண்டிகஸ் (Elephas maximus indicus)
5. தேசிய நீர்வாழ் விலங்கு: கங்கை நதி டால்பின் - உ) நெலம்போ நியூசிஃபெரா (Nelumbo nucifera)
விடைகள்: 1. உ 2. ஈ 3. அ 4. ஆ 5. இ

