PUBLISHED ON : ஜன 26, 2026
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஒரு வழக்கறிஞராகவும், பத்திரிகையாளராகவும் பணியாற்றிய இவர், காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு சுதந்திரப் போராட்டத்தில் இறங்கியவர்.
உப்பு சத்தியாக்கிரகம் மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்காகப் பலமுறை சிறை சென்றவர். இந்தியாவிற்கான சட்டதிட்டங்களை உருவாக்கிய 'இந்திய அரசியலமைப்புச் சபையின்' தலைவராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர்.
சம்பாரண் சத்தியாகிரகம் (1922), ஆத்மகதா (Atmakatha - 1946), இந்தியப் பிரிவு (India Divided - 1946), மகாத்மா காந்தி மற்றும் பீகார் (1949), பாபு கே காட்மோன் மென் (Bapu Ke Kadmon Mein - 1954) ஆகிய இலக்கிய படைப்புகளை எழுதி வெளியிட்டவர்.
சுதந்திர இந்தியாவின் இடைக்கால அரசாங்கத்தில் முதல் உணவு மற்றும் விவசாயத் துறை அமைச்சராகப் பணியாற்றிவர்.
அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, கல்வி வளர்ச்சிக்காகப் பாடுபட்ட இவருக்கு 1962-ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது. அதே வேளையில் மக்கள் அவரை அன்போடு 'தேச ரத்னா' (நாட்டின் ரத்தினம்) மற்றும் 'அஜாதசத்ரு' (எதிரிகளே இல்லாதவர்) என்றும் அழைத்தனர்.
சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இரண்டு முறை தொடர்ந்து பணியாற்றிய ஒரே தலைவர். இவர் யார் என்பதைக் கண்டுப்பிடித்துச் சொல்லுங்கள்.
விடை: டாக்டர் ராஜேந்திர பிரசாத்.

