PUBLISHED ON : ஜன 26, 2026

1937இல் தயாரிக்கப்பட்டது இந்த ஜெர்மன் வாண்டரர் கார் (German Wanderer W24 sedan). நம் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பெரும் பங்காற்றிய மாபெரும் தலைவர் பயன்படுத்தியது. இந்த வாகனத்தின் பதிவு எண்: பிஎல்ஏ 7169.
நான்கு கதவுகள் கொண்ட இதை, ஜெர்மன் ஆட்டோ மொபைல் உற்பத்தியாளர் ஆடி நிறுவனம், பழைமை மாறாமல் புதுப்பித்தது. அது தற்போது, அவரது மூதாதையர் வீட்டில் தற்போது பாதுகாக்கப்பட்டு வருகிறது.
சுதந்திரப் போராட்டம் தீவிரமாக இருந்த காலகட்டத்தில் 1941 ஜனவரியில் அவரை வீட்டுக்காவலில் வைக்க பிரிட்டிஷ் அரசு முயன்றது. அப்போது, இந்தக் காரைப் பயன்படுத்தித் தான் அந்தத் தலைவர், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் இருந்துத் தப்பிச் சென்றார்.
காரை அவரது மருமகன் சிசிர்குமார் ஓட்டினார். தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கோமோ (Gomoh) ரயில் நிலையம், அந்த மாபெரும் தலைவர் பெயரால் அழைக்கப்படுகிறது. அந்தத் தலைவர் யார்?
விடை: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். ஜனவரி 23ஆம் தேதி அவரது பிறந்தநாள். 2021ஆம் ஆண்டு முதல் அவரது பிறந்தநாள் வீர நாளாக (Parakram Diwas) கொண்டாடப்படுகிறது.

