/
ஆன்மிகம்
/
கிறிஸ்துவம்
/
கதைகள்
/
யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன்
/
யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன்
ADDED : பிப் 16, 2022 10:46 AM

அது கோடை காலம். நல்ல நாளிலேயே தண்ணீர் கிடைக்காது. காட்டில் வாழ்ந்த மான்கள் கூட்டம் தண்ணீருக்காக அலைந்தபோது, குளம் ஒன்றை கண்டது. தண்ணீரை கண்ட மான்களோ ஓடின.
ஆனால் அங்கு தண்ணீர் மிகவும் குறைவாக இருந்தது. அப்போது குளத்தில் இருந்த மீன் ஒன்று, ''எங்களுக்கே தண்ணீர் இல்லை.
இதில் நீங்கள் வேறா. போய் வேறு குளத்தை பாருங்கள்'' என பணிவாக சொன்னது.
இதைக்கேட்ட மான்கள், ''எங்களுக்கு தாகம் உயிர் போவது போல உள்ளது. இருந்தாலும் நீ சொல்வதால் நாங்கள் வேறு இடத்திற்கு செல்கிறோம்'' என்று கூறிவிட்டு சென்றது.
இரண்டு நாளில் மழை கொட்டியது. மான்கள் மீண்டும் அங்கு வந்தபோது, வெளியே எட்டிப் பார்த்த மீன், ''அருகே வராதீர்கள்'' என்றது. இதைக்கேட்ட மான் ஒன்று, ''இப்போதான் தண்ணீர் இருக்கே. பிறகு ஏன் எங்களை விரட்டுகிறாய்'' என்றது.
''தவறாக நினைக்காதே. இங்கு முதலை ஒன்று இருக்கு. உடனே போய்விடு'' என கெஞ்சியது.
தப்பித்தோம் பிழைத்தோம் என மான்கள் ஓடின. பிறருக்கு உதவி செய்தால் இயற்கையும் உங்களுக்கு உதவும்.