ADDED : ஜூலை 31, 2021 03:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுவன் ஒருவன் பழம் நிறைந்த மரத்தை கண்டான். அதில் ஏறியபோது கிளை முறிந்ததால் அதை பிடித்து கொண்டு தொங்கினான். அப்போது அவ்வழியே சென்ற முதியவரிடம் உதவி கேட்டான். அவரோ உதவி செய்யாமல் ஒரு சிறு கல்லை அவன் மீது எறிந்தார்.
கோபமுற்ற அவன் நான் கீழே வந்தால் உங்களை சும்மா விட மாட்டேன் என சொன்னான். ஆனால் அவரோ மீண்டும் ஒரு சிறு கல்லை எறிந்தார். கோபம் தலைக்கேறிய அவன் கஷ்டப்பட்டு இறங்கினான். அப்போது அவனை பார்த்து முதியவர் சிரித்தார்.
நானே பதட்டத்தில் இருக்கிறேன். அதில் வந்து நீங்கள் இப்படி விளையாடலாமா என கோபமாக கேட்டான்.
அதற்கு அவர், பதட்டமாக இருக்கும்போது எந்த முடிவும் எடுக்க முடியாது. அதனால் உனது பதட்டத்தை தணிக்க இப்படி செய்தேன் என்றார்.