நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜோசப் வளர்க்கும் நாய்குட்டி புத்திசாலியானது. ஜோசப்பின் மகன் தெருமுனையில் தெரிந்தாலே போதும் ஓடிச் சென்று வரவேற்கும். ஒருநாள் வீட்டில் உள்ள தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார் ஜோசப். அப்போது அங்கிருந்த பாம்பு ஜோசப்பின் காலருகே வந்தது. இதைக்கண்ட நாய் எஜமானை காப்பாற்ற பாம்புடன் சண்டையிட்டது. முடிவில் நாய் இறந்தது.
இதை பார்த்த ஜோசப்பிற்கு விஸ்வாசம் என்பது உயிருள்ள வரை தொடரும் என்ற வேத வாக்கியம் அவரது காதில் ஒலித்தது.