நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கப்பலில் சென்ற பயணிகள் புயலில் சிக்கினர். அதில் இளைஞன் ஒருவன் நீந்தி அருகிலுள்ள தீவில் கரையேறினான். அங்கிருந்த மக்கள் உணவு, உடையளித்து படகு ஒன்றைக் கொடுத்து உதவி செய்தனர். அவர்களுக்கு நன்றி சொன்ன அவன், 'முன்பின் தெரியாத எனக்கு உதவி செய்ய உங்களால் எப்படி முடிந்தது'' எனக் கேட்டான்.
'அடிக்கடி இத்தீவில் இயற்கை சீற்றம் நிகழும். அப்போது நாங்கள் உயிருக்கு போராடுவோம். ஒருமுறை வானில் இருந்து அசரீரியாக, 'திக்கற்றவர்கள் யாராக இருந்தாலும் தீவுக்கு வந்தால் உதவுங்கள். ஆண்டவர் அருளால் எப்போதும் பாதுகாப்பாக இருப்பீர்கள்' என்றது. அதன்பிறகு ஆபத்து எங்களை நெருங்கவில்லை' என்றார் தீவின் தலைவர்.