நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீதியில் நடந்து சென்றார் அறிஞர் ஒருவர். வழியில் செருப்பு அறுந்து விட, அதை தைக்க வேண்டும் என தொழிலாளியிடம் சென்றார். அவரோ அவசர வேலையாக கிளம்பி விட்டேன். பிறகு வாருங்கள் என்றார். 'இன்னும் நீண்ட துாரம் நான் செல்ல வேண்டியுள்ளது' என்றார் அறிஞர். அப்படியானால் இரவலாக வேறொருவரின் செருப்பைத் தருகிறேன். அதை அணிந்து கொள்ளுங்கள்' என்றார் தொழிலாளி.
'அறிஞரான என்னிடம் போய்...' என இழுத்தார்.
'யாரோ சொன்ன கருத்துக்களை தலையில் சுமந்தபடி அலைகிறீர்களே... இன்னொருவரின் செருப்பை அணிந்தால் என்ன தவறு' என்றார். அறிஞர் அமைதியானார்.