நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒரு வீட்டின் திண்ணையில் மூன்று நபர் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களை பார்த்த அந்த வீட்டுப்பெண் நான்சி, 'மூவரும் பசியாக இருக்கிறீர்கள்; என் வீட்டிற்குள் வாருங்கள் உணவளிக்கிறேன்'' என்றாள். 'உன் கணவர் வரட்டும்; அதன் பின் வருகிறோம்'' என்றனர்.
சிறிது நேரத்தில் கணவரும் வந்தார். அப்பெண் அவர்களை வீட்டிற்குள் அழைத்தாள். 'இப்போதும் எங்களால் வர முடியாது. அன்பு, செல்வம், அதிகாரம் என்பது எங்களுடைய பெயர்கள். நீங்கள் யாரை விரும்பினாலும் அவரை மட்டும் அழைத்துக் கொள்ளலாம்'' என்றனர். உடனே அவர்களும் 'அன்பு' என்பவரை முதலில் அழைத்தனர்.செல்வமும், அதிகாரமும் அன்பை பின்தொடர்ந்தனர். அழைக்காமலே வந்து விட்டீர்களே... என கேட்ட போது, அன்பு இருக்கும் இடத்தில் அனைத்தும் கட்டுப்படும் என பதிலளித்தனர். அன்பால் முடியாதது எதுவுமில்லை.