நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிஞர் ஒருவர் தான் படித்த பள்ளிக்கு சென்றார். அவரது கையில் தங்கமாலையும், புத்தகமும் இருந்தது. மாணவர்களிடம், 'இதில் உங்களுக்கு எது வேண்டும்' எனக் கேட்டார்.
அதில் ஒரு மாணவன் , 'தங்க மாலை வேண்டும் எனக் கேட்டான். மற்றொருவன் புத்தகம் வேண்டும் எனக் கேட்டான். அறிஞரும் மகிழ்ச்சியுடன் கொடுத்தார். அதைப் பிரித்துப் பார்த்தான் அவன். என்ன ஆச்சரியம்! புத்தகத்தின் நடுப்பக்கம் தங்கத் தகட்டால் செய்யப்பட்டு, அதில் எழுத்துக்கள் பதிக்கப்பட்டிருந்தன. மாலையை விட அதிக எடை கொண்டதாக அந்த புத்தகம் இருந்தது. அவர்களிடம், எல்லாவற்றையும் விட மேலானது கல்வி என்றார் அறிஞர்
படிப்பவரை ஊக்கப்படுத்துங்கள். அவர்கள் நல்ல விதமாக முன்னேறட்டும்.