ADDED : டிச 26, 2024 11:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பறவைகள் எல்லாம் ஒன்று கூடி மாநாடு நடத்தின. அதில் பறவைகளின் எதிர்கால வளர்ச்சி குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டின் முடிவில் கலைநிகழ்ச்சி நடந்தது. முதல் நிகழ்ச்சியாக மயில் தோகை விரித்து ஆடியது. அதன் திறமையை பாராட்டி மற்ற பறவைகள் பரிசுகள் அளித்தன.
அதைக் கண்ட வான்கோழி, 'எனக்கும் வாய்ப்பு கொடுங்கள்; ஆட ஆசைப்படுகிறேன்' எனக் கேட்டது. மாநாட்டுக் குழுவினரும் சம்மதிக்க மேடையேறி சிறகை விரித்தது. அதைக் கண்ட பறவைகள் எல்லாம் கேலியாக சிரித்தன. அவமானம் தாங்காமல் அங்கிருந்து ஓடியது வான்கோழி. தகுதியுடன் ஆசைப்படுங்கள். இல்லாவிட்டால் அவதிப்படுவீர்கள்.