ஒருமுறை பிலிப்பைன்சில் தன்னார்வ அமைப்பு ஒன்று, 'பசியும் ருசியும்' என்ற தலைப்பில் போட்டி ஒன்றை நடத்தியது. அதில் 3600 படைப்பாளிகள் பங்கேற்றனர். பெர்டினாண்ட்டி என்பவரின் படைப்பு முதல் பரிசை தட்டிச் சென்றது. இவர் எடுத்த குறும்படம் உணவின் அருமையை உணர்த்தியது.
ஓட்டலுக்கு வரும் இரண்டு பெண்கள் பலவித உணவுகளை ஆர்டர் செய்து அரைகுறையாக சாப்பிடுகின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பு ருசி மட்டுமே. அப்படியே மேஜை எங்கும் உணவு மிச்சமாக சிதறிக் கிடக்கிறது. அந்த ஓட்டல் பணியாளர் ஒருவர், அந்த உணவுகளை சேகரித்து தன் வீட்டின் அருகிலுள்ள குழந்தைகளுக்கு கொடுத்து பசி தீர்க்கிறார். அந்தக் குழந்தைகளின் ஆரவாரத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறார். இதையறிந்த ஓட்டலின் முதலாளி தன் பங்கிற்கு பிரத்யேக உணவுகளை தயாரித்து தர அனுமதி தருகிறார்.
உற்சாகம் அடைந்த பணியாளர் தன் சேவையை விரிவுபடுத்துகிறார். பசியுடன் இருப்பவருக்கு ருசி தெரியாது. ருசியுடன் சாப்பிடுபவருக்கு பசி தெரியாது.