ADDED : ஜன 30, 2025 01:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல ஆண்டுகளுக்கு முன் பிரான்சிஸ் பேக்கன் என்ற அறிஞர் இங்கிலாந்தில் வாழ்ந்தார். 'விஞ்ஞானிகளின் தந்தை' என அவரை அழைத்தனர்.
ஒரு பனிக்காலத்தில் வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது யோசனை ஒன்று அவருக்கு உதித்தது. 'உறைபனி மூலம் இறைச்சியை கெடாமல் வைக்கலாம் என்பதே அது' அதை பரிசோதிக்க எண்ணி உறைபனியில் கோழிக்கறியை புதைத்தார். குளிரையும் பொருட் படுத்தாமல் அதன் அருகிலேயே தங்கினார். ஒரிரு நாளில் அவருக்கு காய்ச்சல் வந்தது. இருப்பினும் கை நடுங்கிய படியே என் சோதனையில் வெற்றி பெற்றேன் என டைரி ஒன்றில் குறிப்பிட்டார். இவர் தான் குளிர்சாதனப் பெட்டி (பிரிட்ஜ்) உருவாக காரணமானவர்.