நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியவர் ஒருவர் பேரனை கொஞ்சி மகிழ்ந்தார். அவனுக்கு வயது ஆறு.
'தாத்தா! என் மீது உங்களுக்கு பாசம் தானே...' எனக் கேட்டான் பேரன்.
'ஆம், உன் மீது கொள்ளை பாசம்' என்றார் தாத்தா.
'அன்று ஒரு நாள் ஆண்டவர் மீது ரொம்ப பக்தி என்றீர்களே' எனக் கேட்டான்.
'ஆமாம்' என்றார்.
'உங்களுக்கு இருப்பது ஒரு மனசு தானே...'' எனக் கேட்டான்.
'மனிதர்கள் மீது அன்பு வைத்தால் அது பாசம் அல்லது காதல். அதுவே ஆண்டவர் மீது வைக்கும் போது பக்தியாகி விடும். உயிர்களின் மீதுள்ள வைக்கும் அன்பு இரக்கம். மொத்தத்தில் அன்பு என்னவோ ஒன்று தான்' என்றார்.