
கல்லுாரி ஒன்றில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார் அமெரிக்காவைச் சேர்ந்த பிஷப் ஒருவர். அங்குள்ள மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
'உலகில் கண்டுபிடிக்க வேண்டியவை அனைத்தும் முடிந்தது. இனி கண்டுபிடிக்க எதுவும் இல்லை' என்றார். அதை ஏற்காத மாணவர்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளின் வாசல்படியில் தான் நிற்கிறோம். இன்னும் எவ்வளவோ கண்டுபிடிப்புகள் உள்ளன என மறுத்தனர். 'அப்படியானால் கண்டுபிடிக்க இன்னும் என்ன இருக்கிறது' என சவால் விட்டார். 'விரைவில் மனிதன் பறப்பான் என நம்புகிறேன்' என்றார் ஆசிரியர் ஒருவர்.
இதைக் கேட்டதும் பிஷப் விழுந்து விழுந்து சிரித்தார். 'பைத்தியம் போல பேசாதீர்கள். மனிதன் பறக்க வேண்டும் என நினைத்தால் இறக்கை கொடுத்திருப்பார் ஆண்டவர். பறப்பது பறவை, தேவதைகளுக்கு மட்டுமே; நமக்கு அல்ல' என்றார் பிஷப். இதில் ஆச்சரியமான விஷயம் என்ன வென்றால்... அந்த பிஷப்பின் பெயர் ரைட். அவருக்கு இரண்டு மகன்கள். ஆர்வில், வில்பர். அவர்கள் தான் முதன் முதலில் விமானத்தைக் கண்டு பிடித்தனர்.