ADDED : ஜூலை 11, 2025 08:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சைரன்ஸ் ஒரு அழகான கடற்கரைத் தீவு. அங்குள்ள மக்கள் அனைவரும் இசையில் வல்லவர்கள். தீவிற்கு கப்பல்கள் ஏதும் வந்தால் இசைத்தபடி ஆடுவார்கள். பயணிகள் அதைக் கண்டு மயங்கி கடற்கரையில் தங்குவர். பயணிகளை வரவேற்று குடிக்க மது கொடுப்பர். குடித்து விட்டு மயங்கியதும் அவர்களின் பணம், உடைமைகளை கொள்ளையடிப்பர்.
இதைப் பற்றி கேள்விப்பட்ட உலைசஸ் என்ற மாலுமி, தன் பயணிகளிடம் தீவு நெருங்கும் முன்பாக, 'குளிர்காற்று அதிகம் வீசுவதால் ஜன்னல்களை திறக்காதீர்கள். அனைவரும் காதுகளை பஞ்சால் மூடிக் கொள்ளுங்கள்' என்றான். சைரன்ஸ் தீவு மக்களிடம் இருந்து அவர்களின் கப்பல் மட்டும் தப்பிச் சென்றது. கவர்ச்சிக்கு மயங்கினால் ஆபத்து.