ADDED : செப் 29, 2025 10:44 AM

மன்னர் தாவீதிடம் ஒருமுறை அரண்மனை பொற்கொல்லர், ''மன்னா... தங்களுக்கு ஏதாவது ஆபரணம் செய்யலாமா?'' எனக் கேட்டார்.
எரிச்சலுடன் அவர், ''ஆமாம்... எனக்கு ஒரு மோதிரம் செய். ஆனால் ஒரு நிபந்தனை. துக்கத்தில் இருக்கும் போது அதைப் பார்த்தால் மகிழ்ச்சி வர வேண்டும். மகிழ்ச்சியாக இருக்கும் போது அதைப் பார்த்தால் துக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் உன் தலை துண்டிக்கப்படும்'' என்றார். பொற்கொல்லர் செய்வதறியாமல் திகைத்தார்.
மகனிடம் புலம்பினார் பொற்கொல்லர். அதற்கு மகனோ, ''அழாதே... அப்பா! மோதிரத்தில், 'இதுவும் கடந்து போகும்' என பொறித்து விடுங்கள். பிரச்னை முடிந்தது'' என்றான்.
பொற்கொல்லரும் அப்படியே செய்தார். அதை மன்னரிடம் காண்பித்த போது, 'ஆஹா... அருமை' என மகிழ்ந்தார். பிரச்னையைக் கண்டு கலங்காதீர். இன்பமும், துன்பமும் சில காலமே நீடிக்கும்.