ADDED : அக் 07, 2025 01:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறையில் ஒரே அறையில் பத்து குற்றவாளிகள் அடைக்கப்பட்டனர். அவர்களிடம், ''உங்களில் யார் தப்பி ஓடினாலும் மற்றவருக்கு சாப்பாடு கொடுக்க மாட்டோம்'' என்றனர் அதிகாரிகள். ஆனால் அதையும் தாண்டி ஒருவர் தப்பித்தார்.
அதிகாரிகள் சொன்னபடி உணவு தரப்படவில்லை. கைதிகளில் ஒருவன், ''ஐயோ... நான் குடும்பத்தை பார்க்காமலேயே இங்கேயே செத்திடுவேன் போல'' என அழுதான்.
வேறொரு அறையில் கைதியாக இருந்த பாதிரியார் ஒருவர் இதைக் கேள்விப்பட்டு, அவனுக்குப் பதிலாக எனக்கு உணவு கொடுக்க வேண்டாம்'' என அதிகாரிகளிடம் முறையிட்டார். அவர்களும் சம்மதிக்கவே அந்தக் கைதியை விடுவித்தனர். பாவம்... பாதிரியார் பட்டினியாக இருந்து உயிரைத் துறந்தார். பிறருக்காக உயிரை விடுபவனே தியாகி.