ADDED : அக் 01, 2026 08:48 AM
அ நிறம் | அளவு
அமெரிக்காவில் உள்ள கான்ஸாசை சேர்ந்தவர் மின்டா மார்டின். வானத்தில் இயந்திரம் ஒன்று பறப்பது போல கனவு கண்டார். அப்போது விமானம் கண்டுபிடிக்கப்படாத காலம்.
மகன் கிளின் மார்டினிடம் அடிக்கடி தன்னுடைய கனவு பற்றி சுவாரஸ்யத்துடன் அவள் கூறினாள்.அந்த எண்ணம் சிறுவனின் ஆழ்மனதில் பதிந்தது. மார்டின் பெரியவனான பின் தாயின் கனவை நனவாக்க விரும்பினான்.
மோட்டார் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து, தரையில் ஓடும் வண்டியை வானத்தில் பறக்கச் செய்யலாமே என யோசித்தான்.
மகனின் ஆர்வத்தை அறிந்த மின்டாவும் நம்பிக்கை அளித்தாள். 17 ஆண்டு ஆராய்ச்சிக்கு பின் 1909ல் வெற்றிகரமாக விமானத்தில் பறந்தார். ரைட் சகோதரர்களுக்கு பின் விமானத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு வழிவகுத்தவர் கிளின்மார்டின்.
