தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/எங்கே போகுது எதிர்காலம்

எங்கே போகுது எதிர்காலம்

எங்கே போகுது எதிர்காலம்


ADDED : அக் 29, 2026 01:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 29, 2026 01:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கல்லுாரி பேராசிரியர் வில்சன், நண்பரான ஆரோக்கியத்தை நடைபயிற்சியின் போது சந்தித்தார். 'மாணவர்களுக்கு அடிக்கடி வகுப்பிலேயே மாதிரி தேர்வு நடத்துவேன். அதில் இதுவரை யாரும் தோல்வி அடைந்ததில்லை. ஆனால் சமீபத்தில் நடத்திய தேர்வில் அனைவரும் தோல்வி அடைந்தனர்' என்றார். ஆச்சரியத்துடன் ஜேம்ஸ், ''அது எப்படி நடக்கும்'' எனக் கேட்டார்.

மாணவர்களிடம், ''சிலருக்கு அதிக மதிப்பெண்ணும், சிலருக்கு குறைந்த மதிப்பெண்ணும் தேர்வில் கிடைக்கிறது. அதற்கு பதிலாக நடக்க இருக்கும் மாதிரி தேர்வில் அனைவருக்கும் ஒரே மதிப்பெண் கொடுக்க விரும்புகிறேன். அதற்காக அனைவருடைய மதிப்பெண்களையும் கூட்டி, அதன் சராசரியைக் கணக்கிட்டு உங்களுக்கு ஒரே மதிப்பெண் தரப் போகிறேன்'' எனச் சொன்னேன்.

அனைவருக்கும் சமமான மதிப்பெண் என்பதை அறிந்ததும் பலர் ஆரவாரத்துடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆனால் அந்த மகிழ்ச்சி பொய்யான வெறும் கவர்ச்சி என்பதை இப்போது புரிந்து கொண்டேன்.

அனைவருக்கும் ஒரே மதிப்பெண் என்பதால் நன்றாக படிக்கும் மாணவர்கள், நாம் ஏன் மற்றவருக்காக படிக்க வேண்டும் என அக்கறையின்றி படிக்கத் தொடங்கினர். சராசரியாக படிப்பவர்களோ, 'புத்திசாலிகள் படித்தால் போதும். நாம் கஷ்டப்படத் தேவையில்லை. தேர்வு மட்டும் எழுதுவோம்' என படிப்பதை கைவிட்டனர். படிப்பில் ஆர்வம் இல்லாதவர்கள் வேண்டாத விஷயங்களில் ஈடுபட்டு மனநலம், உடல்நலத்தை இழந்தனர். மொத்தத்தில் மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியானது'' என்றார்.

இலவசம் கிடைக்கிறது என்றால், அதற்காக வேறொருவர் உழைத்துள்ளார் என்பது நிஜம். அரசு மக்களுக்கு இலவசம் தருகிறது என்றால், அதற்குத் தேவையான பணம் வேறொரு இடத்தில் இருந்து வருகிறது.

மக்கள் உழைப்பில் ஈடுபட்டால் நாட்டின் பணபலம் பெருகும். வருமானத்தை பெருக்காமல் கையிருப்பை செலவழித்தால் நாடு தேக்கம் அடையும். வருமானத்தை உருவாக்காமல் இலவசத்தை அனுபவித்துக் கொண்டிருந்தால் எவ்வளவு பணபலம் இருந்தாலும் காணாமல் போகும்.

'எல்லாம் இலவசமாக கிடைக்கிறது; நான் ஏன் உழைக்க வேண்டும்' என இலவசம் பெறுவோரின் மனம் சிந்திக்கும். உழைத்து சம்பாதித்து வரி கட்டும் மக்களோ, 'உழைக்காத சோம்பேறிகளின் பாரத்தையும் சேர்த்து நாம் ஏன் சுமக்க வேண்டும்' என சிந்திப்பார்கள்.

இதனால் அழிவை நோக்கி நாடு நகர தொடங்கும். இது சரியான அணுகுமுறை அல்ல... எதிர்கால சமுதாயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆழ்ந்து யோசிக்க வேண்டிய தருணம் இது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us