ADDED : ஜன 12, 2024 04:39 PM
பெரியவர் ஒருவர் பாடிக் கொண்டே நிலத்தை உழுது கொண்டு இருந்தார். அப்போது மாறுவேடத்தில் அவ்வழியே வந்த அரசர் அதைப்பார்த்து ஆச்சரியப்பட்டார்.
அவரின் மகிழ்ச்சியை தெரிந்து கொள்ள ஆசைப்பட்டார். என்னிடம் பேசமுடியுமா எனக் கேட்க, அதற்கு இப்போது நேரமில்லை. இன்னும் உழ வேண்டும் என சொன்னார் பெரியவர். அவருடன் நடந்து கொண்டே பேச்சுக் கொடுத்தார்.
இது சொந்த நிலமா? என கேட்க, அதற்கு அவர் இல்லை. ஒரு நாள் முழுவதும் வேலை செய்தால் ரூபாய் 200 கூலி கிடைக்கும் என்றார். அதை வைத்து எப்படி வாழ்கிறீர் என கேட்டார். அதை குடும்பத்திற்கும், பழைய கடனுக்கும், தர்மத்திற்கும், வட்டிக்கும் சமமாக பிரித்து கொடுக்கிறேன். அதனால் நிறைவாக வாழ்கிறேன் என்றார். அதைக்கேட்ட அரசரும் புரியும்படி சொல்லுங்கள் என்றார்.
எனக்கும் என் மனைவிக்கும் 50 ரூபாய், அது என் குடும்பம். சின்ன வயதில் என்னை காப்பாற்றிய என் பெற்றோர்களுக்கு 50 ரூபாய், அது பழைய கடன்.
என் தங்கை ஆதரவில்லாத நிலையில் தன் மகனுடன் இருக்கிறாள் அவளுக்கு 50 ரூபாய் அது தர்மம்.
மீதி ஐம்பதை என் பிள்ளைகளுக்காக செலவு செய்கிறேன். அவர்கள் என்னை காப்பாற்றுவார்கள் அது வட்டி என்றார் பெரியவர். மகிழ்ச்சியின் ரகசியம்
அரசருக்கு புரிந்தது.
வருமானம் குறைவாக இருந்தாலும் அதை பிறருக்கு கொடுத்து வாழ்வதே உண்மையான மகிழ்ச்சி.