ADDED : ஜன 26, 2024 07:40 AM

ஆங்கிலக் கவிஞர் ஆல்ப்ரெட் லார்ட் டென்னிசன் நண்பர்களுடன் தங்கியிருந்தார். ஆல்ப்ரெட் அடிக்கடி புகை பிடிப்பவர். ஒருநாள் நண்பர்கள் மத்தியில் அது பற்றிய பேச்சு வர, அவர்கள் கவிஞரைக் கிண்டல் செய்தனர். 'எதையாவது செய்ய நினைத்தால் அதை உடனே செய்ய என்னால் முடியும்'என்றார் கவிஞர். 'உன்னால் முடியாது' என நண்பர்கள் தடுத்தனர்.
' உங்களைப் போல 'வழவழ' பேர்வழிகளால்தான் முடியாது என்ற கவிஞர், 'இதோ... பாருங்கள்' என்று சொல்லி ஜன்னல் வழியாக புகைக்கும் பைப், புகையிலை பாக்கெட்டை தோட்டத்திற்குள் விட்டெறிந்தார். நண்பர்கள் திகைத்துப் போயினர். டென்னிசன் சோர்வின்றி பணியாற்றினார். ஆனால் நாளாக நாளாக உற்சாகம் குறைந்து பித்துப் பிடித்தது போல் ஆனார். 'அட ஆண்டவரே! டென்னிசன் இப்படி வாக்கு கொடுத்திருக்க வேண்டாம்' என நண்பர்கள் வருந்தினர்.
ஒரு வாரம் கடந்த நிலையில் டென்னிசன் ஒருநாள் தோட்டத்துக்குள் நுழைந்தார். துாக்கி எறிந்த புகையிலை பாக்கெட், பைப்பையும் தேடி எடுத்தார். மீண்டும் புகை பிடித்தார். 'தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்'
என்ற பழமொழி இவருக்கே பொருந்தும் என்றனர் நண்பர்கள்.