ADDED : பிப் 09, 2024 11:17 AM
வீட்டிற்குள் நுழைந்த கணவர் மைக்கேலிடம்,''என்னங்க... வீடு கட்ட விண்ணப்பித்த லோனுக்கு முறையான அனுமதி கடிதம் வந்திருக்கு... இந்த வாரமே வீட்டை புதுப்பிக்கும் பணியை ஆரம்பிக்க வேண்டியது தானே'' எனக் கேட்டாள் ரெஜினா.
''இப்போது வேண்டாம் இரண்டு மாதம் கழித்து பார்ப்போம்'' என்றார் கணவர். ''ஏங்க... இப்படி சொல்றீங்க'' என சலிப்புடன் கேட்டாள் ரெஜினா. '' நம்ம பொண்ணுக்கு நிறைய பணம் செலவு செய்து போன மாதம் தான் கல்யாணம் பண்ணியிருக்கோம். அதுவும் தவிர இரண்டு நாளுக்கு முன்னதா மொட்டை மாடியில் குருவி கூடு கட்டி குஞ்சு பொறிச்சிருக்கு. அதன் கூட்டை கலைத்து விட்டு வீடு கட்டினால் நல்லாவா இருக்கும்? 'எல்லா உயிர்களையும் நேசியுங்கள்' என பைபிள் சொல்வது உனக்கு தெரியாதா... வீடு கட்டுறது பற்றி அடுத்து யோசிப்போம்'' என்றார் மைக்கேல்.