
தாவீது பல பிரச்னைகளுடன் தவித்துக் கொண்டிருந்தார். இது தெரியாமல் அப்போது அங்கு வந்த அரண்மனைப் பொற்கொல்லர், ''மன்னா! ஏதாவது நகை செய்ய வேண்டுமா?'' எனக் கேட்டார்.
எரிச்சலுடன் 'எனக்கு ஒரு மோதிரம் செய். நான் துக்கத்தோடு இருக்கும் போது அதைப் பார்த்தால் மகிழ்ச்சி அடைய வேண்டும். மகிழ்ச்சியோடு இருக்கும்போது அதைப் பார்த்தால் துக்கப்பட வேண்டும். அந்தளவுக்கு வித்தியாசமான மோதிரமாக இருக்க வேண்டும்' என சொல்லி அனுப்பினார். பொற்கொல்லர் திகைத்தார். 'மன்னர் கோபமாக இருக்கும் சமயத்தில் கேட்டது பிரச்னையாகி விட்டதே. மோதிரத்தை செய்யாவிட்டால் உயிர் போகுமே' என வருந்தினார். அவரது மகன் நடந்ததைக் கேட்டு, 'வருத்தம் வேண்டாம். மோதிரத்தைச் செய்து 'இதுவும் கடந்து போகும்' என அதில் முத்திரை இடுங்கள்' என்றான்.
அவரும் அதைச் செய்து மன்னரைக் காணச் சென்றார். அன்றும் மன்னர் துக்கத்தில் இருந்தார். மோதிரத்தை வாங்கி அதில் எழுதியிருந்த வாசகத்தை படித்தார். 'ஆஹா... அருமை' என எண்ணி மகிழ்ந்தார்.
'உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்' என்னும் வசனம் உங்களின் நினைவிற்கு வருகிறதா...