
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஷாப்பிங் முடித்து விட்டு காருக்கு ஒரு தம்பதியினர் வந்தனர். அப்போது ஒரு மூதாட்டி அவர்களிடம் பிச்சை கேட்க, நுாறு ரூபாயை கணவன் கொடுத்தார். அப்போது அஞ்சோ, பத்தோ கொடுத்திருக்க கூடாதா என அவரது மனைவி கேட்டாள்.
அதற்கு அவர் இப்போது தான் ஆயிரக்கணக்காக செலவு செய்து ஷாப்பிங் செய்தோமே. அந்தம்மா ஒரு வேளை பசியாறட்டும் என்ற எண்ணத்தில் கொடுத்தேன். அந்த புண்ணியம் நமக்கு வேண்டாமா... ஒருவருக்கு இயலாமை, நோய், இறப்பு இம்மூன்றும் எப்போது வரும் என தெரியாது. ஏழைகளுக்கு உதவி செய்தால் இம்மூன்று விஷயத்தை ஆண்டவர் தள்ளிப்போடுவார் என்றார். அதைக் கேட்ட அவள் ஆனந்த கண்ணீர் விட்டாள்.
முதியவர்களுக்கு நாமும் உதவி செய்யலாமே.