நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலுவலகத்திற்கு சரியான நேரத்திற்கு செல்லும் அமல்ராஜ், அரை மணி நேரம் தாமதமாக வந்தான். செருப்பு அறுந்ததே இதற்கு காரணம். அதை ஒரு செருப்பு தைப்பவரிடம் கொடுத்த போது முப்பது ரூபாய் கேட்க, பேரம் பேசி பதினைந்து ரூபாயாக்கினான். அப்போது ஒரு சிறுவன் வந்து, ''ஐயா... எத்தனை டீ வேண்டும்'' எனக் கேட்க அவர் 'இரண்டு' என்றார். 'தனக்கும் சேர்த்து டீ சொல்கிறாரே' என அமல்ராஜ் மனம் குறுகுறுத்தாலும் டீயைக் குடித்தான். அதற்குள் செருப்பு தயாரானது. கூலியுடன் டீக்குரிய காசையும் சேர்த்து கொடுத்தான். ஆனால் புன்னகையுடன் மறுத்தார் செருப்பு தைப்பவர். 'நீங்கள் என் வாடிக்கையாளர். கூலி போதும்'' என்றார்.
யாரிடமும் பேரம் பேசாதீர்.