
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தன் குஞ்சுகளை அழைத்து, ''அம்மா சொல்றதை கவனமா கேளுங்க... 'கெக்கே கெக்கே' என சத்தமாக நான் கூப்பிட்டால் என்னிடம் ஓடி வந்துடணும்.
'கே கே கே' என கூப்பிட்டால் இரை இருக்கு வாங்கன்னு அர்த்தம். 'கெக் கெக்' எனச் சொன்னால் கவனமாக இருக்கணும்'' என்றது தாய்க்கோழி. சாம்பல் நிறக் குஞ்சு மட்டும் அதை பொருட்படுத்தவில்லை.
ஒருநாள் குப்பை மேட்டில் தனியாக நின்றிருந்தது சாம்பல் நிறக்குஞ்சை அதைக் கண்ட பருந்து ஒன்று அதை பிடிக்க வந்தது. துாரத்தில் இரை தேடியபடி நின்ற தாய்க்கோழி 'கெக்கே கெக்கே' என ஓடி வந்தது. பருந்துடன் சண்டையிட்டு குஞ்சைக் காப்பாற்றியது. இதன்பின் தாயின் சொல்லை அது தட்டுவதில்லை.