
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதிய வேளையில் நடந்து வந்து கொண்டிருந்தான் சல்மோன். அப்போது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த ஒருவரிடம், ''வெயில் சுள்ளுன்னு அடிக்குது. எப்படி நீங்கள் சமாளிக்கிறீர்கள்'' எனக் கேட்டான்.
''இதுல என்ன இருக்கு தம்பி. நல்லாத்தானே இருக்கு. சொல்லப்போனால் இது ரொம்ப பிடிச்சுருக்கு'' என்றார்
''என்னங்க... வெயில் மண்டைய பிளக்குது. இதப்போய் பிடிச்சுருக்குன்னு சொல்றீங்க...'' என வியந்தான்.
''தம்பி! நான் எதை விரும்புகிறேனோ, அதுதான் எனக்கு கிடைக்கும்'' என சொன்னார் பெரியவர்.
''அது எப்படி? நீங்க என்ன மேஜிக் மேனா'' என கேட்டான்.
''எனக்கு எது கிடைக்குதோ, அதை விரும்பி ஏற்பேன். நான் இதை சிறு வயதில் இருந்தே பின்பற்றி வருகிறேன். இந்த மனநிலை யாருக்கு இருக்கிறதோ அவர் உண்மையில் மேஜிக்மேன்தான்'' என்றார்.

