ADDED : ஜன 20, 2013 04:34 PM
ஒரு சர்ச் அருகில் மதுக்கடை ஒன்றைத் திறந்தனர். மக்களுக்கு அங்கிருந்த குடிகாரர்களால் பிரச்னை மேல் பிரச்னை ஏற்பட்டது. இளம்பெண்கள் கலக்கத்துடன் சர்ச்சுக்கு வர வேண்டியதாயிற்று. அவர்கள் அரசுக்கு மனு அனுப்பியும் பலனில்லை. எனவே, ஆண்டவரிடமே அந்தப் பொறுப்பை ஒப்படைத்து, ஒருநாள் இரவு முழுவதும் கூட்டுப் பிரார்த்தனை செய்தனர். ஒரு வாரம் கழிந்தது. ஒரு இரவில் கடும் மழை பெய்தது. மதுக்கடை இடிந்து விழுந்தது. கட்டடம் முழுமையாகப் பழுதடைந்ததால், கடை வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. மக்களின் பொதுநலக் கோரிக்கைக்கு ஆண்டவர் பதிலளித்து விட்டார்.
பைபிளிலுள்ள, மாற்கு 11:24 வசனம் கேளுங்கள்.''ஆதலால், நீங்கள் ஜெபம் பண்ணும்போது எவைகளைக் கேட்டுக் கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள். அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும்''.
ஆம்... இந்த வசனத்தின் படி, ஆண்டவரிடம் நாம் திரும்பத் திரும்ப மன்றாடுவோம். கேட்டதை நிச்சயம் தருவார்.