தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/ஆண்டவரைத் திட்டாதீர்

ஆண்டவரைத் திட்டாதீர்

ஆண்டவரைத் திட்டாதீர்


ADDED : ஆக 30, 2019 02:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2019 02:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனின் சோதனைச்சாலையில் ஒருமுறை தீப்பற்றியது. எடிசன் கலக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். அவரது மகன் கண்ணீர் வழிய, தந்தையின் கைகளைப் பிடித்துக் கொண்டான். மகனைத் தேற்றிய அவர், “ஓடிப் போய் அம்மாவை கூட்டி வா. அவள் வாழ்நாளில் இனி இப்படி ஒரு நிகழ்வைக் காண முடியாது,” என்றார். மகனும் அழைத்து வந்தான்.

“உங்கள் கண்டுபிடிப்பெல்லாம் அழிந்து போனதே! உங்கள் ஆய்வு குறிப்புகளும் எரிந்து போனதே! பல ஆயிரம் பணமும் நஷ்டமாயிற்றே!” என மனைவி அழுதாள்.

''ஒருவேளை என் ஆய்வு குறிப்புகளில் தவறு இருந்ததோ என்னவோ! அதனால் தான் என் புகழை அழியாமல் காக்க ஆண்டவர் இப்படி ஒரு செயலை நிகழ்த்தியிருக்கிறார். நஷ்டத்திலும் லாபம் ஒளிந்திருக்கிறது என்று இதைத் தான் சொல்ல வேண்டும். போனது போகட்டும். என் ஆய்வை இனி முதலில் இருந்து துவக்குகிறேன்''என்று சொல்லி தேற்றினார். அவரது மனைவியும் அமைதியானாள். துன்பம் கூட நம் நன்மைக்காக ஆண்டவரால் தரப்பட்டது என்பதை உணர வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us