ADDED : ஆக 26, 2019 09:25 AM

'கழுதை பொதி சுமக்கலாம், ஆனால் கழுதையை பொதி சுமக்க முடியுமா?... இது கடிஜோக் அல்ல. சீரியசான விஷயம். துறவி ஒருவரிடம் சீடர்கள், “ஐயா! இந்த உடலை பாதுகாக்க குளிக்கிறோம், சாப்பிடுகிறோம், உறங்குகிறோம், வாசனைத் திரவியங்களைப் பூசுகிறோம். இதெல்லாம் எதற்காக?'' என்றனர்.
''இந்த உடல் கழுதை போன்றது.
அது நமக்குள் கிடக்கும் உயிர் என்னும் பொதியைச் சுமந்து செல்கிறது. அதனால் உடலைப் பராமரிக்கிறோம்.
ஆனால், ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். அதிகமாக சாப்பிடும் போதோ, கண்டதை உண்ணும் போதோ, குடிக்கும் போதோ, புகை பிடிக்கும் போதோ நாம் கழுதையைச் சுமந்து செல்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்'' என்றார் துறவி.
“நீ உணவுக்கு அடிமையாகி விட்டால் உன் தொண்டையில் கத்தியை வைத்துக் கொள்” என்கிறது பைபிள்.
ஆம்... தேவையற்ற பழக்கங்கள் மனிதனை அழிக்கும்.
