
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டுராஜாவான சிங்கத்திடம் '' பல ஆண்டு உண்மையாக வேலை பார்க்கிறேன் எனக்கு என்ன பரிசு தர போகிறீர்'' என கேட்டது அணில். ''நம்பிக்கையோடு இரு. பணியில் இருந்து செல்லும் போது வெகுமதி தருகிறேன்'' என சொன்னது சிங்கம். அதைக்கேட்ட அணில் முன்பை விட மேலும் உற்சாகமாக வேலை செய்தது. ஒரு நாள் மாலையில் இன்றோடு உன்னுடைய பணி முடிவடைந்தது என சொல்லி, கூடை நிறைய ஆப்பிள் விதைகளை கொடுத்தது சிங்கம். அதை பார்த்த போது தான் சாப்பிட பல் இல்லை என உணர்ந்தது அணில். உலகில் பலரும் சிங்கத்தை போலத்தான் இருக்கின்றனர். ஆனால் ஆண்டவரை நம்பினால் பிறரை ஏமாற்றும் எண்ணம் இருக்காது.