
தினமும் வீடு தேடி வரும் புறாக்களுக்கு தானியங்களை கொடுத்து வந்தார் அந்த விவசாயி. இதைக்கவனித்த காகத்திற்கு அந்த கூட்டத்தோடு சேர்ந்து கொள்ள ஆசை. விவசாயி வீட்டில் வெள்ளையடிக்க வைத்திருந்த சுண்ணாம்பு பாத்திரத்திற்குள் சென்று மூழ்கி தனது நிறத்தை மாற்றிக்கொண்டது. புறாக் கூட்டத்தோடு சென்று உழைக்காமல் தானியங்களை சாப்பிட்டு வந்தது. ஒரு நாள் வீட்டின் அருகில் செத்துக்கிடந்த எலியை பார்த்து காகங்கள் கரையத்தொடங்கின. புறாக்களுடன் இருந்த வெள்ளைக் காகமும் பழக்கதோஷத்தால் கரைந்தவாறு தன் கூட்டத்தோடு சென்றது. அதன் நிறத்தில் வேறுபாடு கொண்ட அக்காகங்கள் தன்னோடு சேர்த்து கொள்ளவில்லை. புறாக்கூட்டத்துடன் சேர்ந்து கொள்ளலாம் என நினைத்த வெள்ளை காகத்திற்கு விவசாயி கையில் கம்புடன் நிற்பது தெரிந்தது. எப்போதும் இயல்பானதை மட்டும் செய்யுங்கள். சுயத்தை இழந்தால் உள்ள வாழ்க்கையும் நிம்மதியற்று போய்விடும் என்பதை உணர்த்துகிறது காகம்.