
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒருநாள் காலைபொழுதில் ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் பூங்காவில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு பந்துடன் வந்த ஒரு சிறுமி, 'என்னோடு விளையாட வர்றீங்களா' என கேட்டாள். இருவரும் மாலை வரை விளையாடினர். சிறுமி வீட்டிற்கு செல்ல தயாரானாள்.
அவளிடம், ''டால்ஸ்டாயுடன் நான் விளையாடினேன் என உன் தாயாரிடம் சொல்'' என சொன்னார்.
உடனே அந்த சிறுமியும், ''நான் மேரியுடன் விளையாடினேன் என்று நீங்களும் உங்கள் அம்மாவிடம் சொல்லுங்கள்'' என்றாள். இதைக்கேட்ட டால்ஸ்டாய் தன் கர்வத்தை எண்ணி தலைகுனிந்தார்.
'நானே பெரியவன்' என சிலர் நினைக்கின்றனர். மற்றவர்களும் தன்னைப்போல் உயர்ந்தவர்கள் என எண்ணுங்கள்.