ADDED : பிப் 05, 2014 10:23 AM

இன்று மதுப்பழக்கத்தால் பல குடும்பங்கள் அழிகின்றன. இதோ ஒரு சம்பவம்.
ஐதராபாத்தில் சில ஆண்டுகளுக்கு முன், மதுவுக்கு அடிமையான மூவர், 2 பெண்கள் உட்பட 9 பேரைக் கொலை செய்துள்ளனர். ஒருநாள் இவர்களுக்கு குடிக்க பணம் குறைந்தது. அப்போது, ஒரு பெண் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அவர் வைத்திருந்த பணத்தைக் கேட்டனர். அந்தப்பெண் பணம் தர மறுத்து, அவர்களுடன் போராடியிருக்கிறாள். அந்தப் போராட்டத்தில் அவளைக் குத்திக் கொன்று பணத்தை எடுத்தனர். அவளிடம் இருந்தது எவ்வளவு தெரியுமா? வெறும் மூன்றே ரூபாய். மது குடிப்பதற்காக ஆறு நாட்களில் ஏழு பேரைக் கொன்று பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர். கொல்லப்பட்ட எல்லாருமே ஏழைகள்.
இந்தக் கொள்ளையில் இவர்களுக்கு அதிகபட்சமாக கிடைத்த தொகையே வெறும் 600 ரூபாய்தான்.
மது அருந்துவதை பைபிள் வன்மையாகக் கண்டிக்கிறது.
''திராட்சை ரசம் பரியாசம் செய்யும். மதுபானம் அமளி பண்ணும். அதினால் மயங்குகிற எவனும் ஞானவானல்ல'' என்ற (நீதி 20:1) வசனத்தை படித்தவர்கள் குடியை விட்டு விடுவார்கள். 'மது' என்ற வஸ்து குடிப்பவனின் குடியை மட்டுமல்ல, அடுத்தவர்களின் குடியையும் அழித்து விடும்.