தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/வாழ்க்கையை ரசித்து வாழுங்கள்

வாழ்க்கையை ரசித்து வாழுங்கள்

வாழ்க்கையை ரசித்து வாழுங்கள்


ADDED : நவ 22, 2021 11:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 22, 2021 11:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இன்றைய காலத்தில் பலரும் பிரச்னையில் சிக்கித் தவிக்கின்றனர். சிலர் அதை எளிதாக எதிர்கொள்கின்றனர். பலரோ அதை சந்திக்கமுடியாமல் கோபப்படுகின்றனர்.

ஒரு சமயம் கிரேக்கத் தத்துவ ஞானி சாக்ரடீஸ், நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது சாக்ரடீஸின் மனைவி அவரை அழைக்கவே, அவர் அதை கண்டுகொள்ளவில்லை. கோபப்பட்ட மனைவி, சாக்ரடீஸின் தலையில் தண்ணீரை ஊற்றினார்.

ஆனால் அவரோ, ''இவ்வளவு நேரமாக வானத்தில் இடி இடித்தது. இப்போது மழை பெய்துவிட்டது'' என்று அதை நகைச்சுவையாக மாற்றினார்.

பிரச்னையை எப்படி நகைச்சுவையாக மாற்றினார் என்பதை பார்த்தீர்களா. இதுபோல் நீங்களும் வாழ்க்கையை ரசித்து வாழுங்கள். எந்தவித பிரச்னையும் உங்களை பாதிக்காது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us