
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியவர் சாலையோரத்தில் குழிகளை தோண்டி சில விதைகள், மரக்கன்றுகளை நட்டுவித்துக் கொண்டிருந்தார். அந்த வழியாக செல்லும் யாரும் அவரைக்கண்டு கொள்ளவில்லை. இருந்தாலும் அவரின் பணி அவ்வூர் தலைவருக்கு வியப்பை தந்தது. ஒரு நாள் அவரிடமே வந்து உங்களுக்கோ வயது முதிர்ந்து விட்டது. பிறகு எதற்கு இந்த வேலை எனக் கேட்டார். அதற்கு பெரியவர் ''விதை மரமாகி கனி தரும் போது நான் இருக்க மாட்டேன். அதை என்னுடைய மக்களாகிய உங்களுக்கு பயன்படுமே என சொல்லி விட்டு அடுத்த விதை, மரக்கன்றுகளை நடுவதற்கு குழி தோண்ட தயாரானார். விதை விதைக்கின்றவன் பாக்கியவான் என்கிற பைபிள் வாசகம் அச்சடித்த துண்டு பேப்பர் காற்றில் பறந்து வந்து தலைவரின் முகத்தில் பட்டது.