/
ஆன்மிகம்
/
கிறிஸ்துவம்
/
கதைகள்
/
அன்புக்கும் பண்புக்கும் வளைந்துகொடு
/
அன்புக்கும் பண்புக்கும் வளைந்துகொடு
ADDED : ஜூலை 31, 2021 01:16 PM

ஒரு நிறுவனத்தின் தலைவர் தன் மனதில் உள்ள கலக்கம் தீர, பாதிரியார் ஒருவரை பார்க்க சென்றார். பணியாளர்கள் சண்டையிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இதற்கு தீர்வு சொல்லுங்கள் என்றார் தலைவர்.
உங்களுக்குள் ஒருவராக ஆண்டவர் மறுபிறவி எடுத்திருக்கிறார். அவரை கண்டுகொள்ளாததுதான் பிரச்னைக்கு காரணம் என்றார் பாதிரியார். அவர் யார் எனக்கூறுங்கள் என்றார். நீங்கள் அனைவரும் அவரைத் தேடினால் காணலாம் என்றார் பாதிரியார்.
இச்செய்தி புயலாக பரவியது. ஒவ்வொருவரும் யார் ஆண்டவர் என்று தேடத்தொடங்கினர். ஒவ்வொருவரும் பிறரிடம் உள்ள நல்ல குணங்களை பார்த்தனர். யார் மீதும் பழிபோடுவதை நிறுத்தியதால் நிறுவனத்தில் அமைதி தோன்றியது. ஆனால் அவரை கண்டுபிடிக்கமுடியவில்லை.
அவரை கண்டுபிடிக்கமுடியாததால் நிறுவனத்தின் தலைவர் மீண்டும் பாதிரியாரிடம் சென்றார். அவரை கண்டுபிடிக்கமுடியவில்லை என புலம்பினார். அலுவலகத்தில் தேடியதற்கு பதிலாக உங்களின் மனதில் தேடியிருந்தால் கிடைத்திருக்குமே என சிரித்தபடி சொன்னார் பாதிரியார். தலைவருக்கோ ஒன்றும் புரியவில்லை.
நல்ல செயல்கள் யார் செய்தாலும் அவரின் அவதாரம்தானே என சொன்னார் பாதிரியார். அன்புக்கும், பண்புக்கும் வளைந்து கொடுத்தால் பிரச்னையின்றி வாழலாம்.