ADDED : ஆக 21, 2023 02:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டில் வளர்ந்த மூங்கில் ஒன்றோடு ஒன்று உரசிக் கொண்டதில் காடே தீ பற்றிக் கொண்டது. சிங்க ராஜா முதல் யானை உட்பட எல்லா விலங்குகளும் பறவைகளும் அது எப்படி எரிகிறது என வேடிக்கை பார்த்தன.
அப்போது ஒரு குருவி மட்டும் தனது அலகுகளால் தண்ணீரை எடுத்து வந்து தீயில் தெளித்து விட்டு சென்றது. இதைப் பார்த்த நரி குருவியே உனக்கு என்ன வேண்டாத வேலை. நாங்கள் எல்லாம் ஓரமாக நின்று வேடிக்கை பார்ப்பது போல பார்க்க வேண்டியது தானே எனக் கேட்டது.
அதற்கு என்னால் எவ்வளவு தண்ணீரை எடுக்க முடியுமோ அவ்வளவு எடுத்து வந்து ஊற்றுகிறேன். இன்று இல்லாவிட்டாலும் நாளை தீ எரிவது நின்று விடும் என்றது குருவி. அதுபோல பிரச்னைகள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதனை எதிர் கொள்ளுங்கள். ஒரு நாள் அதுவாகவே ஓய்ந்து விடும்.