
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரி ஒன்று வாத்தை துரத்திய போது, கால் தடுக்கி ஆற்றுக்குள் விழுந்தது. நீச்சல் தெரியாத நிலையிலும் போராடி கரைக்கு வந்தது நரி. அன்று முதல், 'உலகில் அபாயகரமானது தண்ணீர்தான்' என நினைத்தது. பின் அது ஒருநாள் துாங்கிக் கொண்டிருந்தபோது, நண்டு அதன் வாலை கொட்டியது. கோபத்தில் நண்டை ஆற்றில் துாக்கி எறிந்து, 'என்னிடம் மோதினால் இதுதான் கதி. பயங்கரமான தண்ணீரில் தள்ளிவிட்டேனே' என சிரித்தது.
பதிலுக்கு அது, ''நண்பா. நான் ஆற்றை தேடித்தான் அலைந்தேன். தக்க சமயத்தில் உதவினாய்' என்றது.
நம்மைப் போல பிறரையும் எடை போடக்கூடாது என்பது உண்மைதானே.