
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இங்கிலாந்தில் பணக்காரர்கள் அதிகமுள்ள கிளப் ஒன்றில், சேர ஏழை வழக்கறிஞரான தாமஸ் மூர் விரும்பினார். கிளப்பின் நிர்வாகி, ''உங்கள் தந்தை சிறிய கடைதானே வைத்துள்ளார். நீங்கள் எப்படி இதில் சேர முடியும்'' எனக்கேட்டார்.
''ஆனால் என் தந்தை நேர்மையான வியாபாரி'' என்றார் தாமஸ் மூர்.
''நீங்கள் ஏன் அவரைப் பின்பற்றவில்லை'' என்று கேட்டார் கிளப் நிர்வாகி.
''உங்கள் தந்தை கூட கண்ணியமாகவே பேசுவார் என கேள்விபட்டிருக்கிறேன். நீங்கள் ஏன் அவரைப் பின்பற்றவில்லை'' என்று பதிலடி கொடுத்து, அந்த ஆணவம் பிடித்த நிர்வாகியை தலைகுனிய வைத்தார்.