ADDED : மார் 09, 2023 11:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலை கேட்டு வந்த பெண்ணிற்கு அந்த ஊரின் மொழி தெரியவில்லை. அவளுக்கு யாரும் உதவ முன் வராததால் சாலையோரத்தில் தங்கியிருந்தாள்.அவளை சொந்த ஊருக்கு அனுப்ப அவ்வூரில் இருப்போர் யாரும் முன்வரவில்லை. தினந்தோறும் எப்படியாவது சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என நினைத்துக்கொண்டே உறங்குவாள். ஒரு நாள் பலத்த மழை பெய்தது. அதில் அடித்த காற்றில் அவளுக்கு எதிரே உள்ள மரத்தின் கிளை ஒன்று முறிந்த நிலையில் இருந்தது. அப்போது இளம் தம்பதியர் அதன் அருகே நடந்து சென்றனர். இதைக்கவனித்த அவள் அவர்களை காப்பாற்றினாள்.
அவர்கள் நன்றி சொன்னார்கள். அது அவளுக்கு தெரிந்த மொழியாக இருந்ததால் அவளின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பிறகு என்ன! சொந்த ஊர் செல்வதற்கு தயாரானாள்.