/
ஆன்மிகம்
/
கிறிஸ்துவம்
/
கதைகள்
/
சிரிப்பு வருது.. சிரிப்பு வருது..
/
சிரிப்பு வருது.. சிரிப்பு வருது..
ADDED : செப் 13, 2021 04:23 PM

மனநல மருத்துவமனைக்கு சென்ற ஒருவர், ''டாக்டர் எனக்கு மனோ வியாதி'' என்றார்.
''உங்களுக்கு என்ன செய்யுது. தெளிவாக சொல்லுங்கள்'' என்று கேட்டார் டாக்டர்.
''எனக்கு கோபம் வரும்போது கோபப்படுத்தியவரின் மூக்கை கடித்துவிடுகிறேன்'' என சொன்னார்.
''சரி.. கடைசியாக யாரின் மூக்கை கடித்தீர்கள். அவர் என்ன செய்தார்'' என மருத்துவர் கேட்டார்.
''அரைமணி நேரத்திற்கு முன்னாடி ஐநுாறு ரூபாய் கேட்ட ஒருவரைத்தான் கடித்தேன்'' என்றார்.
''அதற்கு ஏன் கோபப்பட்டீர்கள். உங்களிடம் இருந்தால் கொடுக்க வேண்டியாதுதானே'' என்றார் டாக்டர்.
''மனநல மருத்துவரான அவர் எனக்கு சரியாக சிகிச்சை தரவில்லை. அதனால் அவரது மூக்கை கடித்தேன்'' என்றார். இதைக்கேட்டதும் டாக்டர் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடினார்.
அந்த டாக்டரை போலத்தான் நம்மில் பலர் இருக்கிறார்கள். கஷ்டம் தனக்கு வராதவரைக்கும், பிறர் கஷ்டத்தை பொருட்படுத்துவதில்லை. இந்த நிலை மாற வேண்டும். உங்கள் மனம் வலிக்கும்போது பிரச்னையை பார்த்து சிரியுங்கள். பிறர் மனம் வலிக்கும்போது அவர்களை சிரிக்க வையுங்கள்.