
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கண்டிஷன், என்னை சுதந்திரமாக வாழ விடலாமே என கணவனிடம் கேட்டாள் ஜான்சி. இதை எப்படி அவளுக்கு புரிய வைப்பது என யோசித்தார் கணவர். அன்று மாலை மொட்டை மாடியில் பட்டம் விடப்போகிறேன் வாருங்கள் என அழைத்தாள் ஜான்சி. பட்டம் விட்டு மகிழ்ந்தாள். மேலே உயர பறக்க பறக்க எவ்வளவு அழகாக இருக்கிறது என சொன்னார் கணவர். அதன் விருப்பம் போல் அது பறக்க முடியவில்லையே என வருத்தப்பட்டாள் ஜான்சி. அதற்கு தடையாக இருப்பது எது என அவர் கேட்க, சட்டென்று நுால் என சொன்னாள் ஜான்சி. நுாலை அறுத்து விட்டால் போதும் என சொல்லியபடியே, அதை அறுத்தார் கணவர். அது கொஞ்ச துாரம் பறந்து கீழே விழுந்தது. அப்போது கணவர், ''பட்டமாக இருப்பது நீ. அந்த நுாலாக இருப்பது நான். இப்போது புரிகிறதா'' எனச்சொன்னார். கட்டுப்பாடான வாழ்க்கையே சுதந்திரமானது.