sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கதைகள்

/

பணத்திற்கு பதில் பால்!

/

பணத்திற்கு பதில் பால்!

பணத்திற்கு பதில் பால்!

பணத்திற்கு பதில் பால்!


ADDED : ஜூலை 28, 2015 10:54 AM

Google News

ADDED : ஜூலை 28, 2015 10:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏழை சிறுவன் ஹவார்ட் கெல்லிக்கு, பள்ளிக் கட்டணம் செலுத்த வசதியில்லை. எனவே, வீடு வீடாகச் சென்று பொருள் விற்று சம்பாதித்தான். அவன் கையில் 10 சென்ட் மட்டுமே இருந்தது. பசி அதிகமானதால் நடக்க முடியவில்லை. சாப்பிடும் எண்ணத்துடன் ஒரு வீட்டின் கதவைத் தட்டினான். ஒரு பெண் வெளியே வந்தாள்.

அவளிடம் உணவு கேட்க தயக்கமாய் இருந்தது.

அதனால், குடிக்க தண்ணீர் கேட்டான்.

ஆனால், அவனது முகக்குறிப்பு அவன் பசியில் துடிப்பதை அவளுக்கு உணர்த்தி விட்டது. சிறுவனுக்கு குடிக்க ஒரு டம்ளர் பால் கொடுத்தாள். அவன் தயக்கத்துடன் பாலை குடித்து விட்டு, ''சகோதரி! வேலை ஏதும் செய்யாமல் பிறரிடம் பொருள் பெறக் கூடாது என என் அம்மா சொல்லியிருக்கிறார்.

உங்கள் வீட்டில் குடித்த பாலுக்கு ஏதாவது வேலை கொடுங்கள். செய்து கொடுத்து விட்டு போகிறேன். மேலும், என் இருதயத்தின் ஆழத்தில் இருந்து உங்களுக்கு என் நன்றியைத் தெரிவிக்கிறேன்,'' என்றான்.

அவனது மனதிற்குள், '' தேவன் மீது விசுவாசம் வைக்கும் போது, அவர் இரங்கி மனிதரைக் கொண்டு உதவி செய்கிறார்'' என்ற எண்ணம் ஓடியது.

காலம் கடந்தது. ஒருமுறை சிறுவனுக்கு உதவிய பெண் நோய்வாய்ப்பட்டு, உள்ளூர் மருத்துவமனையில் சேர்ந்தாள்.

அங்குள்ள மருத்துவர்கள் கைவிட்டநிலையில், நகரத்திலுள்ள மருத்துவர் ஹவார்ட் கெல்லியிடம் அனுப்பி வைக்கப்பட்டாள். அவளை அடையாளம் கண்டு கொண்ட கெல்லியின் கண்கள் அகல விரிந்தன. அவள் குணம் பெற தனிக்கவனம் செலுத்தினார். அவள் பூரண குணம் அடைந்தாள். அவள் செலுத்த வேண்டிய பணத்திற்கான பில்லை கெல்லி அனுப்பினார். அதில், ''உங்கள் பில்லுக்கான பணம், ஏற்கனவே ஒரு டம்ளர் பாலாக கொடுக்கப்பட்டு விட்டது'' என எழுதப்பட்டிருந்தது.

ஆனந்தக் கண்ணீர் பெருக்கிய அவள், ஒரு காலத்தில் தன்னிடம் அவன் பால் வாங்கிக் குடித்ததை புரிந்து கொண்டாள். என்றோ செய்த எளிய உதவியை மறக்காமல், நன்றி மிக்க இருதயத்தை அவனுக்கு கொடுத்த தேவனுக்கு நன்றி சொன்னாள். தேவனுடைய அன்பு மனித இருதயத்திலும், செயலிலும் எப்படி பரவியிருக்கிறது என்பதை உணர்ந்தாள்.

செய்த நன்றியை என்றும் மறக்காதீர்கள்.

சுவிசேஷ முரசு இதழிலிருந்து...






      Dinamalar
      Follow us