
கொரியா சிவில் யுத்தத்தின் பிடியில் அகப்பட்டிருந்த நேரம் அது. ஒரு கிறிஸ்மஸ் இரவில் அமெரிக்கக் கர்ப்பிணி ஒருத்தி உதவிக்காகக் கெஞ்சினாள். அதிகமான குளிர், விறைக்கும் தேகம், உதவிக்கு யாருமே வரவில்லை. வழியே சென்றவர்களும், “எங்கே உன் அமெரிக்கப் புருஷன்?” என கிண்டலாய் விரட்டி விட்டனர்.
பக்கத்து ஊரில் ஒரு மிஷனரி உண்டு என்பதை அறிந்திருந்த அவள் அந்த ஊரை நோக்கி நகரத் தொடங்கினாள். பிரசவ வலியால் வழியில் ஒரு பாலத்தின் அடியில் சென்று ஒதுங்கினாள். அங்கே அவள் குழந்தையைத் தனியாகப் பெற்றெடுத்தாள். தனது துணிகளையெல்லாம் கழற்றி அந்தக் குழந்தையைப் பொதிந்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். மறு நாள் காலையில் அந்த வழியாக வந்த மிஷனரிகள் குழந்தையை மட்டும் காப்பாற்றினர்.
குழந்தை பெரியவனாய் வளர்ந்த போது உண்மையை சொன்னார்கள். தனது ஆடைகளையெல்லாம் களைந்து விட்டு, விறைக்கும் குளிரில் இருந்த அவன், “இதை விட கொடூரமான குளிரை எல்லாம் எனக்காகத் தாங்கினாயா” என நினைத்துக் நடுங்கிக் கொண்டே அழுதான்.
தாயின் அன்பு அளவிட முடியாதது. அதற்கு நிகரானது எதுவும் இல்லை.