
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒரு சொற்பொழிவாளர் மேடையில் பேசிக் கொண்டிருந்தார். அதில் பங்கேற்ற ஆசிரியர் ஒருவர் பேச்சில் அதிகம் இலக்கணப்பிழைகள் இருப்பதைக் கண்டார். ஆனாலும் பேச்சு நன்றாக இருந்ததால் மக்கள் விருப்பமுடன் கேட்டனர். ஒரு கட்டத்தில் சொற்பொழிவாளர் மீது கோபப்பட்டு எழுந்து. ''நீர் பேசுவதில் இலக்கணம் சரியில்லை. அதனால் பேசுவது கூடாது” எனக் கத்தினார் ஆசிரியர்.
“ஐயா! தங்களின் குற்றச்சாட்டு நியாயமானதே. இலக்கணம் எனக்கு தெரியாது தான். ஆனாலும் பேசுகிறேன். உங்களைப் போன்ற படித்தவர்கள் பங்கேற்காததால் தானே என்னைப் போன்றவர்கள் மேடை ஏற வேண்டிய அவல நிலை வந்தது?” என எதிர்த்துக் கேட்டார். வாயடைத்துப் போனார் ஆசிரியர். “பிறர் கண்ணிலுள்ள துாசியைப் பாராதே, உன் கண்ணிலுள்ள உத்தரத்தைப் பார்''